தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையி அதிமுக தலைமை இன்று தங்கள் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் குஷ்பு போட்டியிடுவதாகக் கூறப்பட்ட தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்
பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த பின், பின் திமுக மற்றும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வந்த நடிகை குஷ்பு சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுயில் போட்டியிடுவதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இதற்கான பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுஇட்தி பாகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் நடிகை குஷ்பு இந்தச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவரா…எனக் கேள்வி எழுந்துள்ளது.