Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இரு மாநிலங்களில் அரசு மரியாதை… கி ராவுக்கு கிடைத்த அங்கிகாரம்!

இரு மாநிலங்களில் அரசு மரியாதை… கி ராவுக்கு கிடைத்த அங்கிகாரம்!
, செவ்வாய், 18 மே 2021 (16:19 IST)
தமிழின் ஆகப்பெரும் எழுத்தாளர்களில் ஒருவரான கி ராஜநாரயணன் இன்று தனது 98 ஆவது வயதில் உயிரிழந்தார்.

கரிசல் பூமியில் இடைச்செவல் எனும் கிராமத்தில் பிறந்தவர் எழுத்தாளர் கி ரா. பள்ளிப்படிப்பு பெரிய அளவில் இல்லாத நிலையில் அனுபவப் படிப்பின் மூலமே எழுத வந்தவர். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக பல நூல்களை எழுதியவர். இவரின் கோபல்ல கிராமம் புத்தகத்திற்காக சாகித்ய அகாடெமி விருது வழங்கப்பட்டது. அதையடுத்து புதுவை பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக நியமிக்கப்பட்ட கி ரா. அங்கேயே வசிக்க ஆரம்பித்தார். இந்தியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக தன்னுடைய 96 ஆவது வயதில் நாவல் ஒன்றை எழுதி வெளியிட்டார்.

இந்நிலையில் தனது 98 ஆவது வயதில் இன்று காலை அவர் தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார். அவர் உடலுக்கு தமிழக அரசு அரசு மரியாதை செலுத்தும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்போது புதுச்சேரியில் அரசு மரியாதையோடு அவரின் உடல் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்துக்கு புறப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் இடைச்செவலில் கி ரா வுக்கு சிலை அமைக்கப்படும் என மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடப்பாவிகளா… இதுதான் லாக்டவுனா? சென்னை அண்ணா சாலை டிராபிக்கை பாருங்கள்!