Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

திருப்பூரில் சிறுவன் கடத்தல்; வாட்ஸப்பில் ஷேர் ஆனதால் தெறித்து ஓடிய கொள்ளையர்கள்!

திருப்பூரில் சிறுவன் கடத்தல்; வாட்ஸப்பில் ஷேர் ஆனதால் தெறித்து ஓடிய கொள்ளையர்கள்!
, செவ்வாய், 28 ஜூலை 2020 (12:36 IST)
திருப்பூரில் காலையில் கடத்தப்பட்ட சிறுவன் வாட்ஸப் தகவலால் மாலைக்குள் மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

பேஸ்புக், வாட்ஸப் போன்றவற்றால் பல்வேறு சமூக பிரச்சினைகள் எழுவதாக பலர் குற்றம் கூறி வந்தாலும், சில சமயங்களில் சமூக வலைதளங்கள் உதவியாகவும் இருந்து வருகின்றன. திருப்பூரை சேர்ந்த காஜா மைதீன் என்பவரின் மகன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்த காஜா மைதீன் தனது மகன் புகைப்படம் மற்றும் தனது தொலைபேசி எண்ணை வாட்ஸப்பில் பகிர்ந்து விஷயத்தை கூறியுள்ளார். அதை தொடர்ந்து காஜா மைதீனின் மகன் காணாமல் போன விவகாரம் வேக வேகமாக வாட்ஸப் மூலமாக திருப்பூர் பகுதி முழுவதும் பரவியுள்ளது. மேலும் திருப்பூர் முழுவதும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்த தொடங்கியுள்ளனர்.

இதனால் சிறுவனை கடத்திய கும்பல் பீதியடைந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அருகே சிறுவனை இறக்கிவிட்டு விட்டு தப்பியுள்ளனர். காலையில் காணாமல் போன சிறுவன் வாட்ஸப் பகிர்வால் மாலைக்குள் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள்? – வானிலை அறிவிப்பு!