கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை என்ற அறிவிப்பை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது
சென்னை பூண்டி அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் கொசஸ்தலைஆற்றில் உள்ள ஆற்றில் உள்ள உபரி நீர் இன்று மதியம் 2 மண்இக்கு வெளியேற்றப்பட உள்ளதாகவும் பூண்டி சத்தியமூர்த்தி அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் மதியம் 2 மணிக்கு திறக்கப்படும் என்பதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. பொதுப்பணித்துறையின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.