Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டைக்குழல் துப்பாக்கியாக மத்திய மாநில அரசு செயல்படனும்: அழகிரி அட்வைஸ்!!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (14:28 IST)
பட்டினியிலிருந்து மக்களை காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6761 லிருந்து 7,447 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 206 லிருந்து 239 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 516 லிருந்து 643 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 911 பேரும், டெல்லியில் 903 பேரும், ராஜஸ்தானில் 553 பேரும், தெலுங்கானாவில் 473 பேரும், கேரளாவில் 364 பேரும், ஆந்திராவில் 363 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 
 
இவர்களுக்காக மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. இருப்பினும், மக்கள் சிரமத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இரட்டைக்குழல் துப்பாக்கியாக இரு முனைகளிலும் நிவாரண உதவி செய்து பேரழிவிலிருந்து மக்களை காக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கோரியுள்ளார். 
 
மேலும், பட்டினியிலிருந்து மக்களை காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments