Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை முதல்வர் வேட்பாளரா குஷ்பு? பரபரப்பு தகவல்

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (18:57 IST)
நடிகை குஷ்பு இன்று மதியம் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பதும் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக தான் பாடுபடுவேன் என்று கூறினார் என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் பாஜகவில் இணைந்த குஷ்புவுக்கு என்ன பதவி கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பாஜக வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றன. ஏற்கனவே பாஜகவில் நான்கைந்து துணை தலைவர்கள் இருப்பதால் இன்னொரு துணைத் தலைவர் பதவியை குஷ்பு ஏற்க மாட்டார் என்றே கருதப்படுகிறது 
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கும் பட்சத்தில் அதிமுகவுக்கு முதல்வர் பதவி என்றும், பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி என பேரம் பேசப்படும் என்றும் அதில் உடன்படிக்கை ஏற்பட்டால் துணை முதல்வர் வேட்பாளராக குஷ்பு அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது 
 
அது மட்டுமின்றி தமிழக பாஜக தலைவர்  எல்.முருகன் அவர்களுக்கு தேசிய அளவில் பதவி கொடுத்து விட்டு தமிழக பாஜக தலைவராக குஷ்புவை நியமனம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் எச்.ராஜா உள்ளிட்ட பழம்பெரும் பாஜக தலைவர்கள் எந்த பதவியும் இல்லாமல் இருக்கும்போது இன்று வந்த குஷ்புவுக்கு பெரிய பதவியா என்ற புகைச்சல் இருந்து வருவதாகவும் இதனால் பாஜகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments