கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையால் கோவை குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலம், சாடியாறு கொத்தி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இடைவிடாது தொடர் சாரல் மழையும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
இதனால் கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி மூடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.