செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை ஆய்வு செய்து சரியான நேரத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கும் என பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி.
மத்திய அரசுக்கு சொந்தமான செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையில் தடுப்பூசி தயாரிக்கும் அனைத்து இயந்திரங்களும் தயார் நிலையில் இருந்தும் கடந்த சில வருடங்களாக அந்த ஆலை இயங்காமல் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசுக்கு சொந்தமான செங்கல்பட்டு தடுப்பு ஊசி ஆலையை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
தமிழகத்திடம் அந்த ஆலையை ஒப்படைத்தால் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் செங்கல்பட்டு நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பது பற்றி பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதனிடையே பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன், செங்கல்பட்டு தடுப்பூசி மையம் ஒன்றும் லாரி மெக்கானிக் ஷாப் கிடையாது. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அதை, ஆய்வு செய்து சரியான நேரத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கும். தேவைப்பட்டால் மத்திய அரசு ஏற்று நடத்த வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.