Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விண்ணப்பம் வாங்கவே வராத மாணவர்கள்.. தேதியை நீட்டித்த பாலிடெக்னிக் நிர்வாகம்..!

Advertiesment
பாலிடெக்னிக்

Siva

, ஞாயிறு, 25 மே 2025 (09:34 IST)
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, டிப்ளமோ படிப்புகளுக்கான விண்ணப்ப காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு உட்பட்ட 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இயந்திரவியல், மின்னணுவியல், கணினி பொறியியல் உள்ளிட்ட பல படிப்புகள் நடைபெறுகின்றன. இதில் மொத்தமாக 20,600 இடங்கள் உள்ள நிலையில், தற்போது வரை 11,140 மாணவா்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
 
மே 7ல் விண்ணப்பம் தொடங்கியதுடன், மே 23ல் அவகாசம் முடிந்த நிலையில், மாணவர் வருகை எதிர்ப்பதற்கும் இடங்கள் நிரம்பும் வகையிலும் கால வரையறை இல்லாமல் விண்ணப்பங்களை தொடர்ந்து ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதற்கு இணையாக, நேரடியாக இரண்டாம் ஆண்டு படிக்க 12,184 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகாரிகள் தெரிவிக்கும்போது, கடந்த ஆண்டில் இடங்கள் 68% மட்டுமே நிரம்பியது எனும் காரணத்தால், இந்த ஆண்டில் முழுமையாக இடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
 
மேலும், பத்தாம் வகுப்புக்கு பின் கல்வியை நிறுத்திய மாணவர்களின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறையின் உதவியுடன் சேகரித்து, அவர்களை தொடர்புகொண்டு சேர்க்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிராட்வேயில் இனி பேருந்து நிலையம் கிடையாது.. எங்கே மாற்றப்பட்டது தெரியுமா?