Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நிலமோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்- ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

நிலமோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்- ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம்.

J.Durai

கோயம்புத்தூர் , புதன், 13 மார்ச் 2024 (09:10 IST)
கோவை மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு நிலமோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.   
 
இது குறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில்:
 
எனக்கு உரிமையுள்ள சொத்துக்களை மாநகராட்சிக்கு அபிவிருத்தி கட்டணம் மனை அங்கீகாரத்துக்கு செலுத்தியதாக போலியாக மோசடி ரசீதினை தயாரித்து பொது அதிகார பத்திரம் பதிவு செய்துள்ளனர்.
 
எஸ்எஃப் நம்பர் 156 162/2 163/2 மேற்படி காளைகளில் உள்ள 4.30 ஏக்கரா பூமி வகையறாக்களை நானும் என்னுடன் ராஜரத்தினம் ராஜாமணி ராஜமாணிக்கம் உட்பட ஆறு பேருடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டோம். 
 
சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய மறுத்து விட்டனர். 
என்னை ஏமாற்ற வேண்டும் என்ற மோசடியான எண்ணத்தில் விற்பனையாகாமல் மீதம் உள்ள  ஆறு சைட்களை போலியாக தயார் செய்து ராஜவீதியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் சதாம் என்பவர் உடன் மோசடியாக கூட்டமைத்துக் கொண்டு அவரது தூண்டுதலின் பேரில் அவரது மனைவி ராகிலா பானு என்பவருக்கு போலியான ஆவணங்கள் பவர் பாத்திரத்தை பதிவு செய்து கொடுத்துள்ளார்கள். 
 
எனவே பொது அதிகார பத்திரத்தினை பொய்யாக தயாரித்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாமல் வேறு ஒரு சார் பதிவாளர்  அலுவலகத்தில் மோசடியாக பதிவு செய்துள்ளார்கள்.
 
போலி பொது அதிகார பத்திரம் தயார் செய்த சதாம் மற்றும் அவரது மனைவி ராகிலா பானு தந்தை கணவர் அதேபோல் ஜாயிண்ட் ஒன் சார் பதிவாளர் ஜெயசுதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ்க்கு தான் இரட்டை இலை சின்னம் - உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்