வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்
காட்டாங்குளத்தூரில் இன்று நடைபெற்ற வணிகர் சங்கங்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அவர் தெரிவித்தார்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் ஆளும் கட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோல் சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும், ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், நகராட்சி நிர்வாகத்தில் உள்ள கடைகளில் வாடகை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்
வியாபாரிகள் பாதிக்கப்படும் இந்த விஷயங்கள் குறித்து அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. சாமானிய மக்கள் தங்கள் தேவைகளை போராடித்தான் பெற வேண்டிய நிலை தற்போது உள்ளது.
எனவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை. வியாபாரிகள் விவசாயிகள் சிறு உற்பத்தியாளர்களுக்கு எதிராக எந்த அரசு செயல்பட்டாலும் அதை வணிகர் சங்க பேரவை கடுமையாக எதிர்க்கும். மேலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்