Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கட்சிக்கு ரஜினி; ஆட்சிக்கு நாங்க! – குட்டி கட்சிகளின் பெரிய ப்ளான்!

கட்சிக்கு ரஜினி; ஆட்சிக்கு நாங்க! – குட்டி கட்சிகளின் பெரிய ப்ளான்!
, சனி, 14 மார்ச் 2020 (11:33 IST)
ரஜினிகாந்த் கட்சி சம்பந்தமாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியது முதல் தமிழக அரசியல் வட்டாரம் முழுக்க ரஜினி பேச்சாகவே இருந்து வருகிறது.

1990 தொட்டே ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தாலும், ‘நாம் அப்போ அரசியலுக்கு வறேன்னு சொல்லவே இல்ல, 2017ல்தான் அரசியலுக்கு வருவேன்னு அதிகாரப்பூர்வமாக சொன்னேன்’ என தன்னிலை விளக்கத்தை கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

போதாகுறைக்கு இதுவரை தமிழக கட்சிகளில் நடைமுறைகளில் இல்லாத மூன்று வித்தியாசமான விதிமுறைகளை தனது தொடங்கப்படாத கட்சிக்கு விதித்துள்ளார். அதில் முதல் இரண்டு விதிமுறைகளை ரஜினி தொண்டர்களே ஏற்றுக்கொள்வார்களா என சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

தான் முதல்வர் பதவிக்கு வர மாட்டேன் என ரஜினி சொன்னதுமே அவரது தொண்டர்கள் முகம் வாடிவிட்டதாம். அவர் வரவில்லை என்றால் என்ன நாங்கள் வறோம் என அவரது மூன்றாவது விதிமுறையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள குட்டி கட்சிகள் யோசித்து வருகிறதாம்.
webdunia

தமிழகத்தில் உள்ள சில சிறிய கட்சிகள் மற்றும் பெரிய கட்சிகளோடு கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ரஜினி கட்சி தொடங்கினால் அவரோடு இணைந்து கொள்ள யோசித்து வருகின்றனவாம். ஆனால் ரஜினி கூட்டணி அமைப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால் கட்சியை கலைத்துவிட்டு அவரோடு சேர்ந்து கொண்டால்தான் உண்டு.

இது பெரிய கட்சிகளுக்கு ஒத்துவராது என்றாலும், மாவட்ட வாரியாக உள்ள சில லெட்டர்பேட் கட்சிகள் தங்களை ரஜினி கட்சியோடு இணைத்துக் கொள்ளலாம் என யோசித்து வருவதாக தெரிகிறது. அப்படி இணைத்துக் கொள்வதன் மூலம் ஆட்சியில் தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் என நினைப்பதாக கூறப்படுகிறது.

மக்கள் புரட்சி நடந்துவிட்டதாக ரஜினி எப்போது கட்சி தொடங்குகிறாரோ அப்போதுதான் இந்த யூகங்களுக்கான பதில் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடங்கிப் போன Yes Bank-ல் ஐசிஐசிஐ ரூ.1,000 கோடி முதலீடு!!