கரூர் நகரில், பழைய திண்டுக்கல் சாலையில், லட்சுமிராம் திரையரங்கிற்கு அருகில், உள்ள ஒரு செல்போன் ரிசார்ஜ் கடைக்கு, அதே பகுதியை சார்ந்த ஆனந்த் (வயது 43)., என்பவர் செல்போன் ரிசார்ஜ் செய்ய வந்துள்ளார். அப்போது அக்கடையின் அருகே மினிவேன் ஒன்று லோடுடன் நின்ற நிலையில், அந்த வேனின் டிரைவர் அந்த வேனினை அப்படியே நிறுத்தி விட்டு சாப்பிட அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
அப்போது., அந்த லோடு மினிவேனினை, கார்த்திக் என்கின்ற மனநலம் பாதித்தவர் ஒட்டியுள்ளார். அப்போது தாறுமாறாக ஒடிய மினிவேன், அந்த செல்போன் கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரிசார்ஜ் செய்ய வந்த ஆனந்த் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கரூர் நகரிலேயே பெரும் பரபரப்பிற்குள்ளானது.
கரூர் நகர காவல்துறையினரும், கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரும் இணைந்து இந்த வேன் விபத்தில் உயிரிழந்த ஆனந்த் என்பவரது உடலை மீட்டனர். மேலும், பிரேத பரிசோதனைக்காக, கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆனந்தின் உடல் அனுப்பி வைக்கப்பட்டு, கரூர் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவத்தினால் சுமார் 30 நிமிடங்களாக பழைய திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, அந்த செல்போன் கடையே ரத்த வெள்ளத்தில் கிடந்தது குறிப்பிடத்தக்கது.