Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகுதி பங்கீடு..! பிப்.3,4-ல் திமுகவுடன் இடதுசாரிகள், மதிமுக பேச்சுவார்த்தை.!!

Senthil Velan
திங்கள், 29 ஜனவரி 2024 (10:42 IST)
மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி மூன்றாம் தேதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதிமுக பிப்ரவரி நான்காம் தேதியும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக வருகிற மக்களுக்கு தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என அமைச்சர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும், அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்களவை தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
ஏற்கனவே தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் காங்கிரஸ் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிப்ரவரி 3ஆம் தேதி திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. 
 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்பி சுப்பராயன், முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி உள்ளிட்ட குழுவினர் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
 
அதேபோல் தொகுதி பங்கீடு குறித்து பிப்ரவரி நான்காம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் மதிமுகவும் திமுகவுடன் ஆலோசனை நடத்துகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments