ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அந்த தேர்தலில் வெற்றி யாருக்கு என லயோலா கல்லூரி மாணவர்கள் எடுத்த கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக, திமுக, நாம் தமிழர் மற்றும் தேமுதிக ஆகிய நான்கு அரசியல் கட்சிகளும் சில சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் எடுத்த கருத்து கணிப்பில் ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் 49 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என தெரியவந்துள்ளது.
அதிமுகவுக்கு 36 சதவீத வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு 10 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் யாருடைய ஆட்சி சிறப்பான ஆட்சி என்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு 53 சதவீதமும் முக ஸ்டாலின் ஆட்சிக்கு 42 சதவீதம் ஆதரவும் கிடைத்துள்ளது என்பதும் ஆச்சரியமான தகவலாகவும் உள்ளது. இந்த கருத்துக்கணிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.