Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முரசொலி கூட்டம் ; அனிதாவை ‘சனிதா’ என உச்சரித்த ஸ்டாலின்

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (12:44 IST)
முரசொலி பவள விழாவில் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் பெயரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தவறாக உச்சரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


 

 
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களிலும் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் தெருவில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். 
 
இந்நிலையில், முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நேற்று கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்பே அந்த கூட்டம் தொடங்கியது. மேடையில், அனிதாவின் உருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது. 
 
விழாவின் இறுதியில் நன்றியுரை ஆற்றிய ஸ்டாலின் பேசும் போது “எடப்பாடி தலைமையிலான ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாகவே இருக்கிறது. நீட் தேர்வினால் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காமல் அரியலூரை சேர்ந்த மாணவி சனிதா..’ என உச்சரித்தார். அதன் பின் சுதாரித்து மாணவி அனிதா எனக் கூறினார்.  மீண்டும் தொடங்கி பேசிக்கொண்டிருக்கும் போதும் ஒரு இடத்தில் அனிதாவிற்கு பதில் ‘சனிதா’ என தவறாக உச்சரித்து, பின் திருத்தினார்.
 
நாடு முழுவதும் அனிதா என்கிற பெயர் அனைவரின் மனதில் பதிந்துள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் அவரின் பெயரை தவறாக உச்சரித்தது,  கூட்டத்தில் இருந்த பலருக்கும் முகத்தை சுழிக்க வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments