தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அலட்சியப்படுத்தக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் தனியார் மருத்துவமனைகளை எச்சரித்துள்ளார்.
பொருளாதார வசதியற்ற சாதாரண மக்களும் தரமான மருத்துவ உதவிகளைபெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீடு திட்டத்தை பயன்படுத்த தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாகவும், அலட்சியப்படுத்துவதாகவும் புகார்கள் உள்ளன.
இதுகுறித்து எச்சரித்து பேசிய சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தனியார் மருத்துவமனைகள் அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை அலட்சியப்படுத்தாமல் மக்களுக்கு தரமான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும். அலட்சியம் காட்டினால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் அரசின் திட்டத்திலிருந்து நீக்கப்படும்” என்று கூறியுள்ளார்.