தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழ்நாட்டில் 2 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மக்கள் காணும் பொங்கல் அன்று முழு ஊரடங்கை கடைபிடித்து பெரிய வெற்றியை தந்திருக்கிறார்கள். பொங்கல் விடுமுறைகளுக்கு பிறகு எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.