மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி சுற்றுச்சூழல் ஆணையத்திடம் எய்ம்ஸ் நிர்வாக குழு விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் கூட நடைபெறவில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அமைச்சர் உதயநிதி கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஒரே ஒரு செங்கலை வைத்து இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பத்தை சமர்பித்தது எய்ம்ஸ் நிர்வாக குழு என தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை தோப்பூர் பகுதியில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 221 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.