Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை எய்ம்ஸ் வரும்..! ஆனால் வராது..! என்ன சொல்கிறார் அமைச்சர் ரகுபதி..!

Minister Ragupathi

Senthil Velan

, செவ்வாய், 5 மார்ச் 2024 (17:34 IST)
தேர்தலுக்கு தேர்தல் மதுரை எய்ம்ஸ் வரும் என்றும் தேர்தலுக்குப் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
 
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை தேர்தலுக்காக மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். தேர்தலுக்குப் பிறகு அப்பணிகள் நடைபெறாது என்றும் அவருக்கு கூறினார்.
 
போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய  16 பேரை பாஜக தனது கட்சியில் சேர்த்துள்ளது என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டினார்.
 
இந்தியா முழுவதும் போதை பொருள் புழக்கம் உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக தமிழகம் மீது பழி போட வேண்டாம் என தெரிவித்தார். மேலும் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்றும் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார். 
 
தமிழகத்தில் போதைப் பொருளை தடுக்க முழு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும்  போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 
குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிக அளவில் உள்ளது என்றும் பாஜகவில் உள்ளவர்கள் போதை பொருள் கடத்துவதை முதலில் அண்ணாமலை தடுக்கட்டும் என்றும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.30 க்கு லிப்ஸ்டிக் வங்கி வந்த கணவர்- விவாகரத்து கோரிய மனைவி!