பள்ளி முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் வழியாக ஆண்டுதோறும் பல ஆயிரம் பேர் தேர்வுகள் எழுதி பணி நியமனம் பெறுகின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முழுவதும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணையில் இன்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் 1ம் வகுப்பு முதல் கல்லூரி பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.