கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் புத்தகக் கண்காட்சி எந்த ஒரு சிறு பிரச்சனையும் இல்லாமல் நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த ஆண்டு திடீரென பிரச்சினைக்கு உள்ளாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வி.அன்பழகன் என்பவர் எழுதிய அரசுக்கு எதிரான சர்ச்சைக்குரிய புத்தகம், புத்தக கண்காட்சியில் விற்பனையானதை அடுத்து அந்த புத்தக ஸ்டாலை மூடும்படி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் உத்தரவிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் அந்தப் புத்தக ஸ்டாலை மூடக் கூடாது என ஒரு சில பதிப்பகங்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததால் இந்த பிரச்சினை தற்போது அரசியலாக்கி விட்டது. இதனால் தற்போது இந்த பிரச்சனை தமிழகம் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது
இந்த நிலையில் இன்று புத்தக கண்காட்சிக்கு வந்த மதுரை எம்பி வெங்கடேசன், ’விமர்சிப்பது தவறென்றால் இந்த கண்காட்சியில் காந்தியை பற்றிய புத்தகங்கள் இருக்கக் கூடாது’ என்று சென்னை புத்தகக் கண்காட்சியின் பாபசி அமைப்பிற்கு எதிராக விழா மேடையிலேயே பேசி கண்டனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது