தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகரின் தாயாருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வரும் சகோதரர்கள் இருவரின் தாயாருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
அதனால் அவரது வீடு மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வசித்த தெருவில் யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் உள்ளதா என தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன். மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்த சக அர்ச்சகர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.