Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நீதிக்கு நீதி வேண்டும் என்று மத்திய அமைச்சரை கேட்கும் கமல்ஹாசன்

நீதிக்கு நீதி வேண்டும் என்று மத்திய அமைச்சரை கேட்கும் கமல்ஹாசன்
, வியாழன், 1 மார்ச் 2018 (02:36 IST)
மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என கூறிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நீதிக்கு நீதி வேண்டும் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:

உச்சநீதிமன்றம் ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு இது. ஆனால் அதை நடைமுறைத்த இயலாது என்று மாண்புகிகு மத்திய அமைச்சர் திரு.நிதின்கட்காரி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது

காவிரி படுகையை ஒரு எண்ணெய் பீப்பாயாக மாற்றும் முயற்சிக்கு துணை  போகும் விதமாக பேசுவதும், நடந்து கொள்வதும் ஏற்புடையதல்ல. சட்டத்தின் ஆட்சியை நடத்த, அரசு தவறுகிற போதெல்லாம் நீதி மன்றங்களை நாடுகின்றோம். நீதிமன்றங்களின் தீர்ப்பையும் அரசு செயல்படுத்த மறுத்தால்..நீதி கேட்டு எங்கே செல்வது? யாரிடம் முறையிடுவது? என்கிற உணர்வு தோன்றுமானால் அது குடியரசுக்கும், நீதி அமைப்பிற்கும் பெருமை சேர்க்காது

எனவே, மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவை ஆறு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பை வேண்டும். இவ்வாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி: வைரலாகும் வீடியோ