தேனியைச் சேர்ந்த மக்கள் அதிகார அமைப்பைச் சேர்ந்த நபர் காஷ்மீர் மோடியையும் தேசியக் கொடியையும் இழிவுபடுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அதன் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 –ஐ ரத்து செய்தது. இது நாடு முழுவதும் பரவலாக பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின்தேனி மாவட்ட பொறுப்பாளர் ஜோதிபாசு என்பவர் இது சம்மந்தமாக மோடிக்கு எதிராகக் கார்ட்டூன் ஒன்றை வரைந்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தார்.
அந்த கார்ட்டூனில் ’மோடி டாய்லட்டில் அமர்ந்திருப்பது போலவும் தேசியக்கொடியை டிஸ்யூ பேப்பராகவும் உபயோகிப்பது போலவும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.’. மேலும் இந்த கார்ட்டூனை வாட்ஸ் ஆப் மற்றும் சமூகவலைதளங்களிலும் பரப்பினார். இதனைப் பார்த்த போடி நகர பாஜக பிரமுகர் தண்டபாணி போலிஸில் புகார் அளித்ததை அடுத்து ஜோதிபாசு கைது செய்யப்பட்டுள்ளார்.