தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் நேற்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மணிகண்டன் துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்தித்துள்ளார்.
தகவல் தொழ்ல்நுட்ப துறை அமைச்சராக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் மணிகண்டனிடம் இருந்து அந்த பொறுப்புகள் பிடுங்கப்பட்டு கூடுதல் பொறுப்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை நேற்றிரவு ஆளுநர் அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு முதல்முறையாக அமைச்சரவையில் ஒரு மாற்றத்தை செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. உடுமலை ராதாகிருஷ்ணன் தனியாக ஒரு லட்சம் கேபிள் இணைப்புகளைக் கொண்டுள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது சர்ச்சைகளைக் கிளப்பியது.
இதையடுத்து நேற்று மதுரையில் இருந்து சென்னைக்குக் கிளம்பிய மணிகண்டன் முதல்வரை சந்திக்கப்போவதில்லை எனக் கூறினார். சென்னை வந்தவுடன் முதல் ஆளாக சென்று துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்தித்துள்ளார். இருவருக்குமான சந்திப்பு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை நடந்ததாகத் தெரிகிறது. மணிகண்டன் சொல்லிய அனைத்துப் புகார்களையும் கேட்டுக்கொண்ட ஓபிஎஸ் அவருக்கு ஆதரவாக எந்த பதிலையும் சொல்லாததால் மணிகண்டன் அதிருப்தி அடைந்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு உலாவுகிறது.