நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, கேரளம் உட்பட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக இந்த எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
இந்த நடவடிக்கை, பிற மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை அளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டி, மன்சூர் அலிகான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த பணியை உடனடியாக நிறுத்தும் வரை தனது போராட்டத்தை கைவிட போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். இந்த போராட்டம் சென்னை எழும்பூரில் இன்று காலை தொடங்கப்பட்டது