நடிகர் மன்சூர் அலிகான், சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிட்டார். பரிசல் மூலம் ஏரியை சுற்றிப்பார்த்து, ஏரியை சுற்றி உள்ள பகுதியில் மரக்கன்றுகளை நட்டார்.
அதன் பின்னர், சட்டூர், தும்பிபாடி, காமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது.
மேலும் அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என ஆவேசமாக பெசினார். இவருடன் சமூக ஆர்வலர் பியூஷ்மானுஷ் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.