Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை

Advertiesment
மாணவி
, வியாழன், 26 ஏப்ரல் 2018 (18:19 IST)
காரைக்காலில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 
 
புதுவை மாநிலத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் சுரக்குடி அரசு பள்ளியில் சிவனேசன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
பின்னர் இந்த சம்பவத்தை மற்றவர்களிடம் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார். சில நாட்கள் கழித்து அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
 
அந்த சிறுமியின் பெற்றோர் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது மருத்துவர், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
மாணவி
 
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து, போலீசார் ஆசிரியர் சிவனேசனை கைது செய்தனர். இதனைதொடர்ந்து காரைக்கால் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்பளித்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாராக்கடனுக்கு சொத்துகள் பறிமுதல்: “முடமான பின் வைத்தியத்திற்கு மூலிகை தேடுவது”