Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுக்கு எதிராக பேசினா ஜெயில் தான் - சுட்டிக் காட்டும் மன்சூர் அலிகானின் கைது

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (15:38 IST)
சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த  நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த திட்டத்தினால் கோடிக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் நீராதாரமும் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
 
இதுகுறித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான், எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என ஆவேசமாக பேசினார். இத்திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, அரசியல் வாதிகள் மட்டுமே கல்லா கட்டுவார்கள் எனவும் பேசினார்.
 
இந்நிலையில்  பசுமை வழிச்சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்த, நடிகர் மன்சூர் அலிகானை சென்னை சூளைமேட்டில், நேற்று அதிகாலை சேலம் போலீஸார் கைது செய்து விசாரணைக்காக சேலத்திற்கு அழைத்துச் சென்றனர். 
 
விசாரணை நடத்திய போலீசார் நடிகர் மன்சூர்அலிகான் மீது மக்களை கலவரத்திற்கு தூண்டுதல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுக்க முயற்சித்தல், குற்றம் செய்ய மக்களை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணை முடிந்ததும்  நீதிபதி முன்பு நடிகர் மன்சூர் அலிகானை ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை..!

அந்தரங்க புகைப்படம்... கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறித்த தந்தை - மகன்..!

மாணவிகளை கடித்த பாம்பு.. சர்வே எடுக்க வேற ஆளே கிடைக்கலையா? - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

35 பேரை காரை ஏற்றிக் கொன்ற நபர்! சாலையெங்கும் சிதறிக் கிடந்த பிணங்கள்! - சீனாவை உலுக்கிய சம்பவம்!

ஐயப்ப விரதத்தில் தடங்கல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? - புதிய மேல்சாந்தி அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments