பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று பள்ளி மாண்வர்களோடு உரையாடிய ஒரு நிகழ்ச்சியில் மரம் நட்டு வளர்க்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
அரசுப் பள்ளி மாணவர்களில் அறிவியலில் சிறந்து விளங்கிய 50 பேரைத் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்லாந்து, சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பாக பத்து நாள் கல்வி சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த மாணவர்கள் சுற்றுலா முடிந்து இந்தியா வந்ததும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பேசிய செங்கோட்டையன் ’இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தான் மாணவர்களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் மாணவர்களை அனுப்பும் திட்டம் நடைபெற உள்ளது. மேலும் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடையில் உண்டாக்கும் விதமாக மரம் வளர்த்துப் பராமரிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொருப் பாடத்தில்ம் தலா 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்’ என அறிவித்தார்.