பேரறிவாளனுக்கு திருமணம்: பெண் பார்க்கும் படலத்தை தொடங்கிய அற்புதம்மாள்!
பேரறிவாளனுக்கு திருமணம்: பெண் பார்க்கும் படலத்தை தொடங்கிய அற்புதம்மாள்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் பரோலில் நேற்று ஒரு மாதம் பரோலில் வந்துள்ளார்.
பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து நேற்று அவரை காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் வேலூர் சிறையில் இருந்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
20 வயதில் சிறைக்கு சென்ற பேரறிவாளன் 26 வருடங்கள் கழித்து தன்னுடைய 46-வது வயதில் ஒரு மாதம் பரோலில் தனது வீட்டுக்கு வருகிறார். அவரை அந்த பகுதி மக்கள் உணர்ச்சிப்பெருக்குடன் வரவேற்றனர். அவரது தாய் அற்புதம்மாள், சகோதரி ஆகியோர் கண்ணீர் மல்க பேரறிவாளனை வீட்டில் வரவேற்றனர்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவரது தாய் அற்புதம்மாள், பேரறிவாளன் பரோலில் விடுதலையானதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும். பேரறிவாளனுக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறேன் அதற்காக பெண் பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன் எனவும் கூறினார் அற்புதம்மாள்.