குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ) ஆதரித்து பா.ஜ.க கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி ...
கரூரில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ) ஆதரித்து பா.ஜ.க கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி – கரூர் அரசு கலைக்கல்லூரியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை அமைதி பேரணியாக சென்று கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பா.ஜ.க மனு அளித்தனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்தின் பெயரில் தமிழகத்தில் வன்முறையினை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், இந்திய குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ) ஆதரித்து பா.ஜ.க கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியானது, கரூர் அரசு கலைக்கல்லூரியிலிருந்து கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் கே.சிவசாமி தலைமையில் புறப்பட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அமைதியாக சென்ற பேரணியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பா.ஜ.க மற்றும் பரிவார அமைப்புகள் என்று ஏராளமானோர் அமைதியாக சென்று பின்னர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை நேரில் சந்தித்து பா.ஜ.க கட்சியின் சார்பில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த மனுவில் குடியுரிமை சட்ட திருத்தத்தின் பேரில் தமிழகத்தில் வன்முறையினை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு கொடுக்கப்பட்டது.
முன்னதாக பேரணியில் தமிழகத்தில் தி.மு.க வினை தடை செய்யக்கோரியும் பேரணியில் பேனர்கள் கொண்டும், அதில் ரத்த வெறியில் தி.மு.க ஸ்டாலின் உள்ளதை சுட்டிக்காட்டி பிளக்ஸ்கள் காட்டப்பட்டு பேரணியில் சென்றது.