மயிலாடுதுறை மற்றும் சேலம் இடையே புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
நீண்ட காலமாக மயிலாப்பூர் - சேலம் இடையே ரயில் போக்குவரத்து அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த புதிய நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை – திருச்சி, திருச்சி – கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்களை ஒன்றிணைத்து தற்போது மயிலாடுதுறை சேலம் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ரயில் தினசரி இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. காலை 6:20 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் இந்த ரயில் கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் திருச்சி கரூர் நாமக்கல் வழியாக 1.45 மணிக்கு சேலம் செல்கிறது
அதேபோல் 2.05 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும்.