Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவேக்கை கூப்பிட்டு போனேன்.. அடுத்து ரஜினிதான்! – மயில்சாமியின் கடைசி ஆசை!?

Advertiesment
Mayilsami Rajnikanth
, ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (12:32 IST)
பிரபல காமெடி நடிகரான மயில்சாமி இன்று அதிகாலை திடீர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவருடைய கடைசி ஆசை குறித்து ட்ரம்ஸ் சிவமணி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் மயில்சாமி. நடிப்பு மட்டுமல்லாது மிமிக்ரி, மேடை நாடகங்கள், சமூக சேவை என்ற பல்வேறு செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

நேற்று சிவராத்திரியையொட்டி வண்டலூர் மேகநாதேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டுள்ளார் மயில்சாமி. மயில்சாமியின் கடைசி நிமிடங்கள் குறித்து அவருடன் இருந்த பிரபல இசைக் கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி கூறியுள்ளார்.

Mayilsami Rajnikanth


அதில் “சிவராத்திரிகளில் பல கோவில்களுக்கும் சென்று கச்சேரி செய்வேன். இந்த மேகநாதேஸ்வரர் கோவிலுக்கு என்னை வர சொல்லி மயிலு போன் செய்து கொண்டே இருந்தார். பின்னர் அங்கு சென்று நான் வாசித்தேன். பிறகு நானும், மயிலும் ஓம்காரம் பாடினோம். தனது குடும்பத்தினரை வீட்டில் விட்டுவிட்டு திருவான்மியூர் கோவிலுக்கு வருவதாக சொன்னார்” என்று பேசியுள்ளார்.

மேலும் நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது “இந்த கோவிலுக்கு நான் விவேக் சாரை அழைச்சிட்டு வந்திருக்கேன். ஒரு தடவையாவது ரஜினி சாரை அழைச்சிட்டு வந்து அவர் கையால் லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்ய வெச்சு பாக்கணும்னு ஆசை” என்று மயில்சாமி தனது ஆசையை தெரிவித்ததாகவும் ட்ரம்ஸ் சிவமணி கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரதிய ஜனதா கட்சி எழு என்றால் எழுவார்கள்: அதிமுக குறித்து ப சிதம்பரம்..!