Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை திடீரென பாராட்டிய வைகோ: அணி மாறுகிறதா மதிமுக?

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (12:06 IST)
திமுகவிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்த மதிமுக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய வைகோ, அதன் பின்னர் அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி வைத்து வருகிறார்
 
இந்த நிலையில் முக ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று சூளுரைத்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை திமுகவிடம் இருந்து கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வாழும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு ஆலோசனை கூறி வரும் பிகே, திமுகவை தனித்துப் போட்டியிட அறிவுரை கூறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் கழட்டிவிடப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது 
இதனை அடுத்து மதிமுக அணி மாற திட்டமிட்டுள்ளதாகவும் இதனை உறுதி செய்வது போல் சாத்தான்குளம் தந்தை மகன் வியாபாரிகள் கொலையில் தமிழக அரசும், முதல்வரும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் நீதி விரைவில் கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்
 
சாத்தான்குளம் சம்பவம் குறித்து திமுக விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு நேர்மாறாக சாத்தான்குளம் சம்பவம் குறித்து முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளது கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அணி மாறும் கட்சிகளின் பட்டியலில் மதிமுக முதலாவதாக இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments