முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை பொதுமக்கள் மத்தியில் ஏளனம் செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை செந்தில் பாலாஜியின் இளைஞர் அணி மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறது.
கரூரில் நேற்று (04-10-17) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முழுக்க, முழுக்க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை வசைபாடினார்.
அவர் தொகுதி பக்கம் சென்று பொதுமக்களை சந்திக்க வில்லை என்றும், எட்டப்பன் என்றெல்லாம் உவமை சொற்களை கூறி அவரது போக்கிற்கு, எதிர்கட்சியான தி.மு.க கட்சியை கூட திட்டாமல், முழுக்க, முழுக்க செந்தில் பாலாஜியையே திட்டி தீர்த்தார். அவர் மட்டுமில்லாமல், நிகழ்ச்சி முடிவில் பேசிய தமிழக முதல்வர் அவரது வெற்றிக்காக, நான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 20 நாட்கள் களப்பணியாற்றினேன் என்றும் கூறி சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்தார்.
இந்நிலையில் தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், தற்போதைய அரவக்குறிச்சியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ வுமான (டி.டி.வி அணி) வி.செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், அவருடைய ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமில்லாமல் மாணவர்கள் வரை எல்லோரும் செந்தில் பாலாஜியை திட்டித்தீர்த்த தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை நடிகர் வடிவேலு, நடிகர் கவுண்டமணி மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
சி. ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்