Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிழட்டு நாய்களின் இச்சைக்கு இரையாகிய 13 வயது சிறுமி: காப்பாற்றிய தோழி!

Advertiesment
சிறுமி
, புதன், 8 மே 2019 (12:40 IST)
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வயதான தந்தை மற்றும் மகனை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த புலிக்குட்டை என்ற கிராமத்தில்தான் இந்த கேவலமாக சம்பவம் நடந்துள்ளது. புலிக்குட்டை கிராமத்தை சேர்ந்த 75 வயதான வெங்கடாசலம் மற்றும் அவனது 45 வயது மகன் கிருஷ்ணன் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். 
 
அந்த கடையில் பொருள் வாங்க அந்த பகுதியை சேர்ந்த 13 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி வந்துள்ளார். அப்போது கடை இருந்த தந்தை மற்றும் மகன் அந்த சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளனர். 
சிறுமி
இதை கண்ட சிறுமியின் தோழி அந்த வீட்டின் கதவை தட்டி கூச்சளிட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் கூட வசமாய் சிக்கிக்கொண்ட தந்தையும் மகனும் கதவை திறந்து வெளியே வந்துள்ளனர். அந்த கிழட்டு நாய்களிடம் இருந்து சிறுமியை மீட்டு அவரது தாயாரிடம் ஒப்படைத்துள்ளனர். 
 
மேலும், இது குறித்து சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அந்த புகாரின் பேரில் தந்தை வெங்கடாச்சலம், மகன் கிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு – ஒரு மாணவன் பலி … 8 பேர் படுகாயம் !