சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் நிலையில் கோவை மற்றும் மதுரையிலும் மெட்ரோ ரயில்களுக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் திருச்சி சேலம் மற்றும் நெல்லை மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் என்பது பயணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதும் எந்த விதமான போக்குவரத்து இடையூறும் இன்றி குறிப்பிட்ட நேரத்தில் சென்று விடலாம் என்பதும் கட்டணமும் குறைவு அதுமட்டுமின்றி அனைத்து விதமான வசதியும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் செல்வதை விட மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய அதிக பயணிகள் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையை அடுத்து மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன என்பதும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் மெட்ரோ ரயில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சேலம் திருச்சி நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளின் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது
இதுகுறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மெட்ரோ நிர்வாகம் சேலத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஏப்ரலில் நிறைவு நிறைவு பெறும் என்றும் திருச்சி, நெல்லையில் மேற்கொள்ளப்படும் பணிகள் மே மாதம் நிறைவடைந்து அதன் பின்னர் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.