குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணையில் நீர்மட்டமானது கடந்த 300 நாட்களில் 100 அடிக்கு குறையாமல் இருந்துள்ளது. இதனால் இப்போது குறுவை சாகுபடிக்காக அணை திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வெளியேற்றம் தொடர்ந்து 90 நாட்கள் திறந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இதன் மூலமாக 5.22 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இதில் 3.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் குறுவை சாகுபடி நிலங்களாகும்.
கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பின் இந்த ஆண்டுதான் சரியான நேரத்தில் அணை திறக்கப்பட்டது. அதனை முதல்வர் மலர் தூவி வரவேற்றார்.