ரேசன் அரிசி கடத்தல் விவகாரத்தில் மினி லாரியோடு ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி அடுத்துள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் தனி வட்டாட்சியர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான கேரளா பதிவு எண் கொண்ட மினி லாரி அவ்வழியாக வந்ததை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
வாகனத்தில் 50 கிலோ கொண்ட 80 மூட்டைகளில் 4000 ஆயிரம் கிலோ அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்த கருப்புசாமி என்பவரிடம் வட்டாட்சியர் விசாரணை நடத்தியதில் வேட்டைக்காரன்புதூர் பகுதியிலிருந்து கேரளாவுக்கு அரிசி கடத்திச் செல்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து மினி லாரியும் ஓட்டுநரான கருப்பசாமியும் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.