கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் மாணவியின் உறவினர்கள் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்தப் பள்ளியை அடித்து நொறுக்கியுள்ளனர்.
பள்ளியில் வைத்திருந்த மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் நிரந்தர சான்றிதழ் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பலத்த சேதத்திற்கு உள்ளாகிய கனியாமூர் பள்ளி மீண்டும் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி தற்போது கனியாமூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் பள்ளியை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் மீண்டும் திறக்க ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் பள்ளி மாணவர்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்ட தகவல்கள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் விரைவில் இதற்கு ஒரு நல்ல முடிவு காணப்படும் என்றும் தெரிவித்தார்.