தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை பெற்றோர்கள் பலர் தூக்கி வீசிவிடுவதாக அமைச்சர் பாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வெற்றியூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக அமைச்சர் பாஸ்கர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு மக்களிடம் பேசிய அவர் மாணவர்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் பயில்வதை விரும்புவதில்லை. தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கதான் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் இலவசமாக மாணவர்களுக்காக வழங்கப்படும் சைக்கிள், லேப்டாப் போன்றவற்றை கூட சில நாட்களில் தூக்கி எறிந்துவிடுவது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.