அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு திட்டம் செயல்படுத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தற்போது ரேஷன் கடைகளில் அனைத்து பயனாளிகளின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் கைரேகை ஒத்துப்போனால் மட்டுமே பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் விரைவில் கருவிழி பதிவு திட்டத்தை அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்
வரும் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீதம் ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அடுத்த ஒன்பது மாதத்திற்குள் கருவிழி பதிவு திட்டத்தை அனைத்து கடைகளிலும் செயல்பாடுகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் வரும் பொங்கல் தினத்திற்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.