பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது என மைத்ரேயனுக்கு ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
பதவிக்காலம் முடிந்ததும் முன்னாள் எம்பி மைத்ரேயன் மெரினாவில் செய்தியாளர்களை சந்தித்த போது, தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன், அது கிடைக்கவில்லை.
அதிமுகவில் மீண்டும் எம்.பி. பதவி கிடைக்கும் என நினைத்தேன். அதுவும் கிடைக்காதது எனக்கு வருத்தம். அதேபோல் இரட்டை தலைமை என்பதில் சாதக, பாதகங்கள் உள்ளன. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது சிறந்ததாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வலையில் அமைச்சர் ஜெயகுமார் பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, அரசியலில் ஏற்றத்தாழ்வு என்பது சகஜம், முந்தைய காலங்களில் எனக்கும்தான் சீட் மறுக்கப்பட்டுள்ளது. நான் அழுதேனா?
வாய்ப்பு மறுக்கப்பட்டதால் முடங்கிவிடாமல் தொடர்ந்து கட்சிக்காக உழைத்தேன். வாய்ப்பை முதலில் மறுத்தாலும், என்னுடைய உழைப்பை பார்த்து ஜெயலலிதா மீண்டும் வாய்ப்பு கொடுத்தார்.
பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது என மைத்ரேயனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.