துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
துக்ளக் பத்திரிக்கையின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி ”முரசொலி வைத்திருந்தால் திமுகக்காரன் என்பார்கள், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பெரியார் ராமர் படத்திற்கு செருப்புமாலை போட்டு கொண்டு சென்றதை துக்ளக் பகிரங்கமாக விமர்சித்ததாகவும், அதற்காக தடை செய்யப்பட்டதாகவும் ரஜினிகாந்த் பேசியதற்கு திராவிட கட்சி தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் “நமது அம்மா நாளிதழ் படித்தால் பொது அறிவு வளரும். ஆனால் அதிமுக நாளிதழ் குறித்து ரஜினிகாந்த் பேசவில்லை. அவர் ஏன் பேசவில்லை என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்” என கூறியுள்ளார்.