Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டாலின் சாத்தானா? திமுகவை சீண்டும் ஜெயகுமார்!

Advertiesment
ஸ்டாலின்
, புதன், 18 டிசம்பர் 2019 (10:31 IST)
திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம் என்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 
 
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுகவின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் இதனைத்தொடர்ந்து இன்று குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. 
 
திமுகவின் இந்த அனைத்து கட்சி கூட்டத்தை விமர்சித்து அதிமுக அமைச்சர் ஜெயகுமார் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, திமுக - காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியிருக்க வேண்டியது தானே. 
ஸ்டாலின்
மத்திய அரசில் பங்கு வகித்த போது இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்காமல்,  தற்போது அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம் என்பது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது. 
 
கடந்த 2009 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதினார் வேறு எதையும் செய்யவில்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ளார் ஜெயகுமார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரவு முழுவதும் போராடிய மாணவர்கள்.. மசோதா எதிர்ப்பில் தீவிரம்