Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏசி இருந்தால் ரேஷன் பொருட்கள் கிடையாதா? அமைச்சர் காமராஜ் விளக்கம்

ஏசி இருந்தால் ரேஷன் பொருட்கள் கிடையாதா? அமைச்சர் காமராஜ் விளக்கம்
, சனி, 20 ஜூலை 2019 (00:32 IST)
தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இதன்படி ஏசி உள்ளிட்ட பல அம்சங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் குடும்ப அட்டைக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
அதாவது ஒரு குடும்பத்தில் தொழில் வரி செலுத்துவோர், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள், மத்திய மாநில உள்ளாட்சி அமைப்புகள் பணியாற்றுபவர்கள், ஓய்வு பெற்றவரை கொண்ட குடும்பம், நான்கு சக்கர வாகனத்தை சொந்தமாக வைத்திருக்கும் குடும்பம், ஏசி வைத்திருக்கும் குடும்பம், மூன்று அல்லது அதற்கு மேல் உள்ள அறைகளை கொண்ட கான்கிரீட் வீடுகளில் உள்ள குடும்பம், வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம், அனைத்து ஆதாரங்களில் இருந்து பெறப்படும் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு இனிமேல் ரேஷன் சலுகை இருக்காது என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
webdunia
இந்த நிலையில் அமைச்சர் காமராஜ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பொதுமக்களுக்கு தரப்படும் என்றும், வீட்டில் ஏசி போன்றவை இருந்தால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்பது தவறான தகவல் என்றும், தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலின் தனது முயற்சியை கைவிட்டு விட்டார்: தனியரசு எம்எல்ஏ தகவல்