சாலை விதிகளை மதிக்கும்படி அறிவுரை கூறினால் தன்னை மீம்ஸ் போட்டு கேலி செய்வதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிகழ்ச்சி ஒன்றில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனால் அதே நிகழ்ச்சியில் அவர் 'சாலையில் வலதுபுறமாக செல்ல வேண்டும் என்று கூறி பின் சுதாரித்து இடதுபுறமாக செல்ல வேண்டும் என்று கூறினார்.
நாமக்கல் அருகே வள்ளிபுரம் என்ற பகுதியில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன அலுவலக கட்டிடத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சாலை விதிகளை பின்பற்றுமாறு அறிவுரை சொன்னால் மீம்ஸ் போட்டு என்னை விமர்சனம் செய்கின்றனர். சாலையில் வலது புறம் தான் செல்ல வேண்டும் என்று பேசினார். பின்னர் அவர் அருகில் இருந்தவர்கள் அவருடைய தவறை சுட்டிக்காட்ட உடனே சுதாரித்து கொண்ட அமைச்சர் இடது புறம் செல்ல வேண்டும் என்று திருத்தி கூறினார்.
போக்குவரத்து துறை அமைச்சரே இப்படி பேசினால் மீம்ஸ் போடாமல் என்ன செய்வாங்க என்று விழாவிற்கு வந்த ஒருசிலர் கமெண்ட் அடித்தனர்