பத்து நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையாக 130 ரூபாயும் சில்லறை விலையாக 150 ரூபாயாகவும் ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தக்காளி விலை உயர்வு குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் கூறிய போது பசுமை பண்ணை கடைகளில் தக்காளி கொள்முதல் அதிகரித்துள்ளோம் என்றும் இன்னும் பத்து நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகளிடமிருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.